கெலமங்கலம் ஒன்றியத்தில் ரூ.12 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஒன்றியம் ஜெக்கேரி ஊராட்சி சின்னட்டி கிராமத்தில் ரூ.2 லட்சத்தில் சிமெண்டு சாலை, ரூ.3 லட்சத்தில் பேவர் பிளாக், ரூ.2 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ஆனேக்கொள்ளு ஊராட்சி முருகன் நகரில் ரூ.5 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய திட்டப்பணிகள் மொத்தம் ரூ.12 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபா, சுரேந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், தி.மு.க. கிளை செயலாளர் சிவக்குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனிசாமி மற்றும் ஊர்கவுண்டர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story