போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட போர்வெல் லாரிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த லாரி உரிமையாளர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'போர்வெல் லாரிகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போர்வெல் அமைக்க அடி ஒன்றுக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில போர்வெல் லாரி உரிமையாளர்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் போர்வெல் அமைத்து வருகிறார்கள். அவ்வாறு குறைந்த கட்டணத்திற்கு போர்வெல் அமைத்துக் கொடுத்தால் டீசல் விலை, வாகன தேய்மானம் மற்றும் தொழிலாளர்கள் கூலி ஆகியவற்றிற்கு கட்டுப்படியாகாத நிலை ஏற்படுகிறது. எனவே தங்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்யக் கோரி இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.


Next Story