சாலையின் இருபுறங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும்


சாலையின் இருபுறங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும்
x

சாலையின் இருபுறங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும்

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்,

திருச்சிற்றம்பலம் அருகே கல்லூரணிக்காடு-நாடாங்காடு வரை உள்ள சாலையின் இருபுறங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகலான சாலை

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே கல்லூரணிக்காடு கிராம ஊராட்சி உள்ளது. நரியங்காடு கிராமத்தில் இருந்து கல்லூரணிக்காடு வழியாக நாடாங்காடு வரை செல்லும் சாலை 3 கிலோமீட்டருக்கு சமீபத்தில் தார்சாலை செப்பனிடப்பட்டது. தற்போது கல்லூரணிக்காடு கிராமத்தில் இருந்து காலகம் ெரயில்வே கேட் வரை செல்லும் சாலை மூன்று கிலோ மீட்டர் தார்ச்சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சாலைகளும் ஒரு வழிப்பாதையாக மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

அகலப்படுத்தி தரவேண்டும்

கல்லூரணிக்காடு கிராமத்தின் வழியாக செல்லும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நரியங்காடு- நாடாங்காடு சாலை, கல்லூரணிக்காடு - காலகம் ெரயில்வே கேட் சாலை ஆகியவற்றின் இருபுறங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கல்லூரணிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story