மூதாட்டியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது


மூதாட்டியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் விடுதியில் மூதாட்டியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் துப்புரவு பணி செய்து வருகிறார். அதன் அருகே உள்ள விடுதியில் சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வருகிறான். இவன் சம்பவத்தன்று மூதாட்டி வேலை பார்க்கும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளான். திடீரென்று மூதாட்டியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.


Next Story