சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் சீண்டல்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் முகேஷ்(வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

செம்பு கம்பிகள் திருடியவர் கைது

* திருச்சி கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ. வங்கியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இணைக்கப்பட்டுள்ள செம்பு கம்பிகளை திருடியதாக தாராநல்லூர் அலங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செம்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*திருச்சி பொன்மலைப்பட்டி கந்தசாமி நகர் நேரு தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகன். கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்க சென்று விட்டார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒப்பாரி போராட்டம்

*திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகளது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உப்பிலியபுரத்தில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. மாவட்டஒருங்கிணைப்பாளர் ஓசரப்பள்ளி ஜெயராஜ் பங்காருசாமி தலைைம தாங்கினார்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

*திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.


Next Story