லேப்-டாப், செல்போன் திருடிய சிறுவன் கைது


லேப்-டாப், செல்போன் திருடிய சிறுவன் கைது
x

லேப்-டாப், செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தவுட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மாதவன், மாதேஸ்வரன். இந்தநிலையில் மாதவன் வீட்டில் இருந்த லேப்-டாப் மற்றும் மாதேஸ்வரன் என்பவர் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவை திருடுபோனது. இதுகுறித்து 2 பேரும் தனித்தனியாக வேலாயுதம்பாயையம் போலீசிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்டிப்பாளையம் கிணற்றுமேட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் லேப்-டாப் மற்றும் செல்போனை திருடி கரூர் பழைய அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் செல்போன் கடையில் லேப்-டாப் மற்றும் செல்போனை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றதும் தெரியவந்தது.இதையடுத்து அந்த கடைக்கு சென்ற போலீசார் லேப்-டாப் மற்றும் செல்போனை மீட்டனர். பின்னர் அந்த சிறுவனை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story