தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை


தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை
x

தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆயில்மில் காலனியை சேர்ந்தவர் ஞானதுரை. இவரது மகன் ஜோசப் லூர்துநாதன் (வயது 17). 10-ம் வகுப்பு வரை படித்த இவன் சம்பவத்தன்று தனது செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தனது தாயார் சில்வியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு தாய் சில்வியா, தற்போது தன்னிடம் பணம் இல்லை, பணம் வந்தவுடன் ரீசார்ஜ் செய்து தருவதாக கூறி உள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த சிறுவன் ஜோசப் லூர்துநாதன் வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சில்வியா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story