லாரி கதவு இடித்து சிறுவன் பலி
லாரி கதவு இடித்து சிறுவன் பலியானான்.
விருதுநகர்
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் லட்சுமணன் (வயது 17). இவர் சம்பவத்தன்று கிராவல்மண் கொண்டு செல்லும் லாரியில் சென்றுள்ளார். பூலாவூரணி தெற்கு தெருவில் லாரியில் இருந்து கிராவல் மண்ைண இறக்க முயன்ற போது லாரியின் பின்பக்க கதவு லட்சுமணன் மீது இடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை டாக்டர் பரிசோதித்தபோது, ஏற்கனவே லட்சுமணன் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காளிமுத்து மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், லாரி டிரைவர் தெய்வம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story