பாம்பு கடித்து சிறுவன் சாவு


பாம்பு கடித்து சிறுவன் சாவு
x

களம்பூரில் பாம்பு கடித்து சிறுவன் சாவு

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த களம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பிரியாகுமாரி. இவர்களுடைய மகன்கள் திவாகர், உதய அரசு (வயது 3).

இந்த நிலையில் நேற்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு களம்பூர் அருகே வளையல்கார குன்று மீதுள்ள முருகன் கோவிலுக்கு சரவணன் குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் நாராயணமங்கலம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென உதயஅரசு வாயில் நுரை வந்தது.

இதையடுத்து அவனை களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து சிறுவனை பாம்பு கடித்துள்ளதாகவும், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து சரவணன் 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து சிறுவன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து இருந்தால் தனது மகனை காப்பாற்றி இருக்கலாம் என்றும், தாமதமாக வந்ததால் தான் இறந்து விட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரியாகுமாரி களம்பூர் போலீஸ் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story