இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு அடி-உதை


இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு அடி-உதை
x

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு அடி-உதை விழுந்தது. அப்போது அவர் மன்னித்துவிடும்படி போலீஸ்காரர் காலில் விழுந்து கதறி அழுதார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு அடி-உதை விழுந்தது. அப்போது அவர் மன்னித்துவிடும்படி போலீஸ்காரர் காலில் விழுந்து கதறி அழுதார்.

இளம்பெண்ணிடம் சில்மிஷம்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று இரவு மது போதையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பஸ்சுக்காக 19 வயது இளம்பெண் ஒருவா் காத்திருந்தார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இளம்பெண் அருகே சென்ற வாலிபர் திடீரென அவரிடம் சில்மிஷம் செய்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

வாலிபருக்கு அடி-உதை

இருப்பினும் சில பயணிகள் துணிச்சலுடன் ஓடி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி னர். விசாரணையில், அந்த வாலிபர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே வாலிபர் திடீரென போலீஸ்காரரின் காலில் விழுந்து மதுபோதையில் தவறு செய்து விட்டதாகவும், தன்னை மன்னித்துவிடுங்கள் என கூறி அழுதார்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அண்ணா பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story