மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி


மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
x

இரும்பாலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியானான்.

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரைபாப்பம்பாடி, புத்தூர் குட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (வயது 32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மகத் (5) என்ற மகனும், தன்ஷிகா (2) என்ற மகளும் இருந்தனர். கவுதமன் நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர்களை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த மோட்டார் ைசக்கிள் எதிர்பாராதவிதமாக மகத் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்டதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவன் மகத் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த மகத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story