லாரி மோதி வாலிபர் படுகாயம்


லாரி மோதி வாலிபர் படுகாயம்
x

லாரி மோதி வாலிபர் படுகாயம்

தஞ்சாவூர்

திருவையாறு தாலுகா பெரம்மூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தபத்மநாபன். இவரது மகன் அருண்(வயது22). சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் கும்பகோணம் சென்று விட்டு திருவையாறுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவையாறு சாலையில் ஈச்சங்குடி பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக அருண் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அருணின் தாயார் இளவரசி(45) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story