சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story