3 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது


3 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் இந்த வழக்கில் தனது நண்பனை சிக்க வைத்து தப்ப முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் இந்த வழக்கில் தனது நண்பனை சிக்க வைத்து தப்ப முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம்பெண் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கூத்தியம்பட்டை ஊராட்சி வைரவனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அமுதன். இவருடைய மகள் சுகன்யா (வயது 23). திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சுகன்யா கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் மறுநாள் 5-ந் தேதி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது சுகன்யாவின் தற்கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் வினோத் (27) தான் காரணம் என சுகன்யாவின் உறவினர்கள் நினைத்துள்ளனர். இதனால் அவரை கைது செய்யக்கோரி பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செல்போனை ஆய்வு செய்த பெற்றோர்

இந்நிலையில் இறந்த சுகன்யாவின் செல்போனை 3 மாதங்களுக்கு பிறகு அவரது பெற்றோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த செல்போனில் இருந்த உரையாடல்களை கேட்ட பெற்றோருக்கு, சுகன்யா அரசூர் அருகே பட்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த ஜாண்டிரோஸ் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் சுகன்யாவின் தற்கொலைக்கு அவரது காதலர் ஜாண்டிரோஸ் தான் காரணம் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து செல்போன் பதிவுகளுடன் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் சுகன்யாவின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சுகன்யாவின் காதலன் ஜாண்டிரோஸ்சிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜாண்டிரோஸ் தனது நண்பரான பைனான்சியர் வினோத்திடம் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கி இருந்ததும், அதனை வினோத் திருப்பித்தர வற்புறுத்தியதால் அவரை சுகன்யாவின் தற்கொலை வழக்கில் சிக்கவைத்ததுடன் உறவினர்களை தூண்டிவிட்டு சாலைமறியலிலும் ஈடுபட வைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் ஜாண்டிரோசை கைது செய்து அவரை சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story