கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமிகள்
செங்கோட்டையில் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து சிறுவர், சிறுமிகள் அசத்தினர்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை தஞ்சாவூர் தெரு யாதவா் சமுதாயம் சார்பில் வடக்குத்தி அம்மன் கோவில் முன்பு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னா் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கோலாட்டம் ஆகியவை நடந்தன. தொடா்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். விழாவில் பெண்கள், சிறுவா், சிறுமிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தஞ்சாவூர் தெரு யாதவர் சமுதாயம், யாதவா் இளைஞரணி சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story