கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மசிர கண்டீஸ்வரர் கோவில்
திருவையாறை அடுத்த கண்டியூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மசிர கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 15 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 30-ந்தேதி சுவாமி திருமண கோலத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும், 31-ந்தேதி காலை வெண்ணெய்த்தாழி, இரவு குதிரை வாகனம் புறப்பாடும் நடைபெறுகிறது.
தேர்த்திருவிழா
அடுத்தமாதம் ஜூன் 1-ந்தேதி தேர்த்திருவிழாவும், இரவு பிஷாடன மூர்த்தி புறப்பாடும், 3-ந்தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 7-ந்தேதி சர்வபிராசித்தாபிஷேகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி, ஆய்வாளர் கீதாபாய், எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.