சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா


சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா
x

சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா தொடங்கியது.

விருதுநகர்

விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார். திருவிழாவை முன்னிட்டு பெருமாள் அன்னம், யானை, சந்திர பிரபை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.



Next Story