ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்


ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
x

வந்தவாசியில் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் உள்ள ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்கள் அதிகாலை ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் கோபுரம் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

பின்னர். ரங்கநாத பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story