மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
உடுமலையைச் சேர்ந்தவர் அஜய்குமார் (வயது23).இவருக்கு தலையில் வலி ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.நோய் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் திடீரென அஜய்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் கார்த்திகேயன்-சுமதி ஆகியோர் அஜய்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதனால் உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது. மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு உடுமலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட பொருளாளர் தென்றல் சேகர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தியதுடன் அஜய்குமாரின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.