கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு
கோவில்களின் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்
ஓமலூர்:
ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி அடிவாரம் பகுதியில் சரபங்கா ஆற்றையொட்டி முத்து மாரியம்மன் கோவில் மற்றும் முனியப்பன் கோவில்கள் உள்ளன. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முனியப்பன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். . இதுகுறித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 2 கோவில்களின் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story