கடையை உடைத்து பணம் திருட்டு
கடையை உடைத்து பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி:-
மகராஜகடையை அடுத்த பழையூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 39). இவர் காட்டிநாயனப்பள்ளியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் இருந்த 300 ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை திருட்டு போய் இருந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்த நாட்களில் ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.100 எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story