வீட்டின் கதவை உடைத்து திருட்டு
மானூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் இசக்கிமுத்து (வயது 24). இவர் தற்போது கரூர் மாவட்டத்தில் தங்கி இருந்து டிரைவராக வேலை செய்து வருகிறார். இசக்கிமுத்துவின் வீட்டின் அருகே அவரது சித்தப்பா மாரியப்பன் என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து இசக்கிமுத்துவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இசக்கிமுத்து உடனடியாக ஊருக்கு வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்கள் அரை பவுன் தங்க கம்மலும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story