பூதப்பாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை
பூதப்பாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்்து 16 பவுன் நகையை ெ்காள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொள்ளை
பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை அடுத்த கேசவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவகோபாலன். இவர் வெளிநாட்டில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவரது வீட்டில் சிவகோபாலனின் தாய் மற்றும் மனைவி சந்தியா (வயது 24) ஆகியோர் உள்ளனர். சந்தியா நேற்று முன்தினம் இரவு கணவருடன் செல்போனில் பேசி விட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை காணவில்லை. மேலும் பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் இ்ருந்த 3 வளையல்கள், தங்க சங்கிலி ஆகியவற்றையும் காணவில்லை. அவர் வெளியே வந்த போது, வீட்டின் முன் கதவு உடைந்து கிடந்தது. எனவே இரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மொத்தம் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
விசாரணை
இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டது.
இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.