வெல்டிங் பட்டறையில் பூட்டை உடைத்து எந்திரங்கள் திருட்டு
மயிலாடுதுறை அருகே வெல்டிங் பட்டறையில் பூட்டை உடைத்து எந்திரங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே வெல்டிங் பட்டறையில் பூட்டை உடைத்து எந்திரங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூட்டு உடைப்பு
மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் அப்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் கலையரசன் (வயது 37). இவர் அதே பகுதியில் ஆனதாண்டவபுரம் சாலையில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 28-ந் தேதி வேலைகளை முடித்துவிட்டு வெல்டிங் பட்டறையை பூட்டிவிட்டு கலையரசன் வெளியூருக்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு கலையரசன் அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மேலும் கடைக்குள் இருந்த வெல்டிங் எந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி வெல்டிங் பட்டறையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.