பேக்கரியின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பேக்கரியின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்
சூரமங்கலம்:
சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கணேசன் கடந்த 26-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அவர் கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை அங்கு வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.47 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story