குருசடியில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை


குருசடியில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
x

குருசடியில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே இலந்தவிளையில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சொந்தமான புனித ஜார்ஜியார் குருசடி மெயின் ரோட்டில் உள்ளது. நேற்று காலை இந்த குருசடியில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தன.

இதுகுறித்து பங்கு பேரவை துணை தலைவர் மெல்கியாஸ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே குருசடியில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story