கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 8:56 PM IST)
t-max-icont-min-icon

சுண்டப்பற்றிவிளை முத்தாரம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

சுண்டப்பற்றிவிளை முத்தாரம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

உண்டியல் உடைப்பு

ஈத்தாமொழி அருகே உள்ள சுண்டப்பற்றிவிளை ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பூஜை செய்ய மணி மற்றும் சுதாகர் என 2 பூசாரிகள் உள்ளனர். இங்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடப்பது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிலுக்கு சாமி கும்பிட பக்தர் ஒருவர் வந்தார். அப்போது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

திருட்டு

உடனே இதுபற்றி ஊர் தலைவர் கிருஷ்ணன் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இந்த கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து கிருஷ்ணன் ராஜாக்கமங்கலம் போலீசில் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீப காலமாக ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story