கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு
கடையின் மேற்கூரையை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பாலவநத்தம் அருகே விருதுநகர் சாலையில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக மூர்த்தி பணிபுரிந்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக கம்பெனியை மூடி விட்டு பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் காலையில் கம்பெனியை திறந்தார். அப்போது மேற்கூரை உடைக்கப்பட்டு பீரோ மற்றும் டிராயரில் இருந்த ரூ.60 ஆயிரம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மூர்த்தி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story