கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

சாத்தூா் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள வடமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாமுண்டீஸ்வரி மற்றும் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி பால்பாண்டி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு மீண்டும் வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கோவிலில் உள்ள 4 குத்துவிளக்கு, பூஜைமணி, தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்ள்கள், மின் மோட்டார் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேேபால கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் உள்ள பேட்டரியும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.


Next Story