கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அருகே வடமலாபுரத்தில் ஸ்ரீ நாரணஅம்மாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் ராமமூர்த்தி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 4-ந் தேதி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலுக்கு வந்த போது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி ராமமூர்த்தி கோவில் நிர்வாகத்திற்கும், திருத்தங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் திருத்தங்கல் போலீசார் கோவிலுக்கு வந்து சம்பவ இடத்தை பார்த்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story