கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை அருகே புலவர் நத்தம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகி ஏகாம்பரம் (வயது53) என்பவர் வழக்கம் போல் கடந்த 1-ந்தேதி மாலை வழிபாடு செய்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். 2-ந்தேதி காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏகாம்பரம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story