பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.


பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்  கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
x

ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணரு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணரு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன், நல்லதம்பி உள்ளிட்டார் ‌கலந்து கொண்டு திட்டத்தினை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

1,175 மாணவர்கள்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் தமிழ்நாடு மாநிலத்தில் தான் முதலில் கொண்டுவரப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது மாவட்டத்தில் முதல் கட்டமாக ஆம்பூர் நகராட்சியில் 6 பள்ளிகளில் 548 மாணவர்கள், வாணியம்பாடி நகராட்சியில் 5 பள்ளிகளில் 627 மாணவர்கள் என மொத்தம் 11 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1,175 மாணவர்கள் பயனடைகிறார்கள்.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஒரே இடத்தில் உணவுகளை தயார் செய்து வாகனத்தின் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் சென்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி என 2 பகுதிகளில் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. இதை கண்காணிப்பதற்கு செயலி மூலம் தினமும் உணவுகளின் பட்டியல் மற்றும் நேரத்தின் விவரங்களை ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சத்தான உணவை சாப்பிட்டு நன்றாக படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆம்பூர் ஒ.ஏ.ஆர் தியேட்டர் அருகே 2 மாணவிகள் விபத்தில் உயிரிழந்த இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார், ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, துணைத் தலைவர் ஆறுமுகம், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story