3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு


3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
x

பந்தலூரில் நள்ளிரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பூஜை முடிந்த பின்னர், பூசாரி ரமேஷ் பூட்டி விட்டு சென்றார். அருகே உள்ள வீட்டில் அவர் உறங்கி கொண்டிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்ட பூசாரி எழுந்து வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை வெளியே பூட்டியது தெரியவந்தது. கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.

தகவல் அறிந்த நிர்வாகிகள் வந்து பார்த்த போது, மின்விளக்குகளை அணைத்து விட்டு கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதேபோல் பந்தலூர் பகவதி அம்மன் கோவில் மற்றும் ரிச்மெண்ட் மாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story