பீரோவை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு
அறந்தாங்கி அருகே பீரோவை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே நாகுடி களக்குடியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 45). இவர் கடந்த 12-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வீட்டு வாசல் அருகே சாவியை மறைத்து வைத்துவிட்டு தேடாக்கி கிராமத்திற்கு சமையல் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், சூட்கேஸ் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அதன் அருகே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story