வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் கணபதி மனைவி ராஜேஸ்வரி(வயது28). கணபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வயலிலிருந்து மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.15 ஆயிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று இருந்தது தெரிய வந்தது. இது குறித்து ராஜேஸ்வரி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story