வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
சமயநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் வி.எம்.டி. நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 47). இவர் கார் பழுது பார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது மகளை அழைத்துக் கொண்டு மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். பின் மீண்டும் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கிரில் கதவு பூட்டு உடைத்து உள்ளே மரக்கதவும் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்த லாக்கரில் வைத்திருந்த தங்க செயின், தங்க மோதிரங்கள் உள்ளிட்ட 4¼ பவுன் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. அதை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.