கோவில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
மயிலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு மர்ம நபர் கைவரிசை
விழுப்புரம்
மயிலம்
மயிலம் பாலய வீதியில் கங்கைகொண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் நிர்வாகி ராஜேந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவில் யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story