கோவில் பூட்டை உடைத்து உண்டியல், வெள்ளி வேல் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து உண்டியல், வெள்ளி வேல் திருட்டு
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் மல்லமூப்பம்பட்டி அருகே பழையூர் பூனை கரடு புத்து மாரியம்மன் கோவிலில் பூஜையை முடித்து பூசாரி கோவிலை பூட்டி சென்றுள்ளார். மறுநாள் பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் வெள்ளிவேல் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story