தாய்ப்பால் வார விழா


தாய்ப்பால் வார விழா
x

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் அனிதா பாலீன் தலைமை தாங்கினார், டாக்டர்கள் மீனாட்சி, மீரான் மொய்தீன், முரளிதரன், ஹரிஹர சுதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அதனைதொடா்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், கல்லூரி மாணவிகள், உள்பட பலா் கலந்து கொண்டனா்.


Next Story