பட்டா வழங்க லஞ்சம்: பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
பணகுடியில் பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த 4 பெண்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனு வருவாய்த்துறை பரிந்துரைக்காக பணகுடி வருவாய் அலுவலருக்கு அனுப்பப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த பணகுடி வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, 4 பேரிடமும் பட்டா வழங்க தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் கேட்டார். இவ்வாறு லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் விசாரணை நடத்தினார். பின்னர் ஜான்சிராணியை பணியிடை நீக்கம் செய்து உத்ததரவிட்டார்.
Related Tags :
Next Story