தீக்காயங்களுடன் செங்கல் சூளை உரிமையாளர் பிணம்
நாகூர் அருகே தீக்காயங்களுடன் செங்கல் சூளை உரிமையாளர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர் அருகே தீக்காயங்களுடன் செங்கல் சூளை உரிமையாளர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல் சூளை
நாகை மாவட்டம் நாகூர் அருகே ஒக்கூர் வெங்கிடங்கால் செம்பியநதி பகுதியை சேர்ந்தவர் நாத்திகமணி (வயது 59).இவர் வாழ ஒக்கூர் பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாத்திகமணி, செங்கல் சூளைக்கு செல்வதாக மனைவி கவிதாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்
இதனால் சந்தேகம் அடைந்த கவிதா செங்கல் சூளைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு நாத்திகமணி தீக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிதா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாத்திகமணியின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.