கழுகுமலையில்புகையிலை பொருட்கள் விற்ற கொத்தனார் கைது


தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில்புகையிலை பொருட்கள் விற்ற கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை பகுதிகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கழுகுமலை பஸ்நிலையம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு கையில் பை வைத்து கொண்டு நின்றவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 150 பாக்கெட்டுகள் புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.15 ஆயிரம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கழுகுமலை குதிரைலாய தெருவை சேர்ந்த சேதுராமலிங்கம் (வயது 43) என்பதும், கொத்தனாராக வேலை பார்த்து வருவதும், விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story