திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
வத்திராயிருப்பு அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வத்திராயிருப்பு அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராணுவ வீரர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சேதுநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 47). இவருடைய மகள் கவுசல்யா (23). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தை சேர்ந்த ராணுவ வீரரான வேல்முருகன் என்பவருக்கும் கடந்த ஜூன் 1-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
விடுமுறை முடிந்து வேல்முருகன் ராணுவ பணிக்கு மீண்டும் சென்றார். இந்தநிலையில் கவுசல்யா தலைவலி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.
புதுப்பெண் தற்கொலை
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்ததும் அவரை சேதுநாராயணபுரத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்தநிலையில் தலைவலி அதிகம் ஆனதால் கவுசல்யா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை உறவினர்கள் காப்பாற்றினர். இதையடுத்து நேற்று காலை வீட்டில் உள்ள குளியல் அறையில் கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.