திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 45). இவருடைய மகள் கலைவாணி (26).
இவருக்கும், சூலக்கரையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் கலைவாணி, கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவருடைய தந்தை பிச்சைமணி சூலக்கரை போலீசில் கொடுத்துள்ள புகாரில் கலைவாணியின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும், அது பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்திருப்பதால், அதுதொடர்பாக உதவி கலெக்டரும் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story