புதுப்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை


புதுப்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
x

புதுப்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மோகனசுந்தரி (வயது 22). இவருக்கும், பையூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூத்தினிப்பட்டியில் தந்தை வீட்டில் இருந்த மோகனசுந்தரி திடீரென மாயமானார். பின்னர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரன் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story