கிருஷ்ணகிரி அருகே ரூ.10 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிஅசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கம்மம்பள்ளி ஊராட்சி, சின்னேப்பள்ளி ஏரியில் இருந்து வெண்ணம்பள்ளி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இக்கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே போல், மல்லிநாயனப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து புதிய பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன் (கிழக்கு), சோக்காடி ராஜன் (மேற்கு), மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் சென்றாயப்பன், ஒன்றிய துணை செயலாளர் குமரேசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமேஷ்குமார், துணைத்தலைவர் நாராயணகுமார், கவுன்சிலர் சங்கீதா சரவணன், கிளைச்செயலாளர்கள் கோவிந்தராஜ், வெங்கட்ராமன், சுப்ரமணி, சின்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.