பெதப்பம்பட்டி சாலையின் குறுக்கே மேல்பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டும்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


பெதப்பம்பட்டி சாலையின் குறுக்கே மேல்பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டும்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
x

பெதப்பம்பட்டி சாலையின் குறுக்கே மேல்பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டும்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்

உடுமலை

உடுமலை அருகே குறிஞ்சேரி பகுதியில் அமைக்கப்பட்டுவரும்நான்கு

வழிச்சாலையில், பெதப்பம்பட்டி சாலையின் குறுக்கே மேல்பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டும்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நான்கு வழிச்சாலை

மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.இந்தபணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தில் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை50.07கி.மீ, மடத்துக்குளம் முதல்ஒட்டன்சத்திரம்வரை45.38கி.மீ, மற்றும் ஒட்டன்சத்திரம் முதல்கமலாபுரம் வரை36.51கி.மீ.எனமொத்தம்131.96கி.மீ.தூரத்திற்கு இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த சுமார் 2

ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான பிரதான சாலை மட்டுமின்றி பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கிராமப்புறங்களில் 106.693கி.மீ.தூரத்திற்கு புறவழிச்சாலைஅமைகிறது.

கிராமப்புறங்கள்

கிராமப்புறங்களில் இந்த நான்கு வழிச்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்தல், திட்டவடிவமைப்பின்படி உயரமாக மண் கொட்டப்பட்டு, ஜல்லிகற்கள் நிரப்பப்பட்டு, தார்சாலைஅமைத்தல், சாலையோரங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைத்தல், பாலங்கள் மற்றும்

உயர்மட்ட பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நகரபகுதிகளை நான்குவழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் 47கி.மீ.தூரத்திற்கு அணுகு சாலையும்அமைக்கப்படுகிறது

குறிஞ்சேரி அருகே உயர் மட்ட பாலம்

நான்கு வழிச்சாலையின்

ஒருபகுதிஉடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கணபதிபாளையம் பிரிவுக்கு அருகில் இருந்து தொடங்குகிறது.இந்த நான்கு வழிச்சாலை குறிஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெதப்பம்பட்டி சாலை மற்றும்சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திருப்பூர்சாலை, தாராபுரம் சாலை ஆகிய சாலைகளின் குறுக்கே கடந்து உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி அருகே வந்து இணைகிறது.

இந்த நிலையில் உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.



Next Story