திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்த விளக்க கூட்டம்
திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்த விளக்க கூட்டம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் நகராட்சியின் அறிவுறுத்தலை பின்பற்றி தங்கள் மொத்த குப்பைகளை தாங்களே இயற்கை உரமாக்கி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இத்திட்டத்தை செயலாக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து 'நம்ம ஊரு" பவுன்டேஷன் தலைவர் நடராஜன் வீடியோ காட்சி மூலம் எடுத்து கூறினார். இதில் ஓட்டல் அசோசியேசன் தலைவர் செந்தில்வேல் மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் உணவக உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story