பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளி ஆண்டு விழா


பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளி ஆண்டு விழா
x

வாலாஜா பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் 15-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அரோரா -23 விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் நிர்மல் ராகவன், நந்தினி நிர்மல் ராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் நிர்வாகி மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லட்சுமி வழிகாட்டுதல்படி கே.ஜி. மாணவர்கள் முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிறுவர்களின் கண்கவர் நடனம் மற்றும் அனைத்து வகுப்பு மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள், பல்வேறு மாநில நடனங்கள், தமிழரின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து, சிலம்பாட்டம், குங்பூ, கராத்தே, யோகா, பொம்மலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்வியாண்டில் சிறப்பாக பங்களித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை பள்ளியின் தாளார் நிர்மல்ராகவன் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆலோசகர் கமல்ராகவன் மற்றும் துர்கா கமல் ராகவன், யுவராஜ், வினோதினி யுவராஜ், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story