பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன எந்திரம் பழுதானதால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன எந்திரம் பழுதானதால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
குளிர் சாதன எந்திரம் பழுது
கர்நாடக மாநிலம் பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.50 மணியளவில் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது நேற்று மாலை 4 மணியளவில் பங்காரப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற போது சி 1 மற்றும் சி 2 ஆகிய 2 குளிர்சாதன பெட்டியில் குளிர்சாதன எந்திரம் வேலை செய்ய வில்லை என பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரெயில் பெட்டியில் ஜோலார்பேட்டை ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மெக்கானிக் பிரிவு ஊழியர்கள் குளிர் சாதன எந்திரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை.
2 மணி நேரம் தாமதம்
சென்னை மற்றும் பெங்களூரு பகுதியில் மட்டுமே இதற்கான வசதிகள் இருப்பதால் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அந்தவழியாக சென்ற மைசூர்- சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பெங்களூரு- சென்னை நோக்கி செல்லும் மற்றொரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் குளிர் சாதன பெட்டியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயில் குளிர் சாதன பெட்டியை முழுவதும் மூடிய பிறகு மற்ற பயணிகளுடன் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக நேற்று மாலை 7.5 மணியளவில் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.